தவ்பா

தவ்பாதவ்பா

பாவமன்னிப்பு

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

தவ்பா

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸைய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸைய்யிதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹும்ம அயின்னா வலா துயின் அலைய்ய, வன்ஸுர்னா வலா தன்ஸுர் அலைய்ய, வம்குருனா வலா தம்குரு அலைய்ய, வன்ஸுர்னா வஹ்தினா, வய்ஸிர் ஹுதா, வன்ஸுர்னா அலா மன் பஙா அலைஹி.

அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம், வமின்கஸ் ஸலாம், வஇலைக்க எர்ஜிஉஸ் ஸலாம், தபாரக்த வதஆலைத்த வதஅல்லம்த யாதல் ஜலாலி வல்இக்ராம்.

தவ்பா பாவமன்னிப்பு

  1. யா அல்லாஹ்! எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக!
  2. யா அல்லாஹ்! எங்களுடைய தாய், தந்தையர் களின் பாவங்களை மன்னிப்பாயாக!
  3. யா அல்லாஹ்! எங்களுடைய ஆசிரியத் தந்தைகளின் பாவங்களை மன்னிப்பாயாக!
  1. யா அல்லாஹ்! எங்களுடைய உற்றார், உறவி னர்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
  2. யா அல்லாஹ்! எங்களுடைய இன பந்துக் களின் பாவங்களை மன்னிப்பாயாக!
  3. யா அல்லாஹ்! எங்கள் ஊரில் வசிக்கும் முஸ்லிமான ஆண், பெண் அனைவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
  4. யா அல்லாஹ்! உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் பாவங்களை மன்னிப் பாயாக!
  5. யா அல்லாஹ்! நாங்கள் அறிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள், வேண்டுமென்றே செய்த பாவங்களை மன்னிப்பாயாக!
  6. யா அல்லாஹ்! நாங்கள் கடந்த காலங்களில் செய்த பாவங்களை மன்னிப்பாயாக!
  7. யா அல்லாஹ்! நாங்கள் பகலில் செய்த பாவங்கள், இரவில் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக!
  8. யா அல்லாஹ்! எங்களின் உறுப்புகள் கண், காது, நாவு, கரங்கள், கால்கள் செய்த பாவங்களை மன்னிப்பாயாக!
  1. யா அல்லாஹ்! எங்களுடைய ஒவ்வொரு உறுப்பு களும் உனக்கு மாற்றமாக பாவங்களை செய்து கொண்டே இருக்கின்றன. மன்னித்து, ஸாலிஹான தன்மையை ஏற்படுத்துவாயாக!
  2. யா அல்லாஹ்! எங்கள் சிந்தனைகளில் ஏற்படுகின்ற பாவங்கள், எண்ணங்களின் நினைப்பில் உதிக்கின்ற பாவங்களை மன்னிப்பாயாக!
  3. யா அல்லாஹ்! நாங்கள் தனிமையில் செய்த பாவங்கள், கூட்டாக செய்த பாவங்கள் அனைத் தையும் மன்னித்து அருள் புரிவாயாக!
  4. யா அல்லாஹ்! நாங்கள் உறவினர்களுடன் சேர்ந்திருக்கும் நிலையில் செய்த பாவங்கள், நண்பர்களுடன் செய்த பாவங்களை மன்னித்து கிருபை செய்வாயாக!
  5. யா அல்லாஹ்! நாங்கள் நன்மை என்ற பெயரில் பாவங்கள் செய்திருக்கின்றோம். தாய், தந்தையருக்கு நோவினை செய்திருக் கின்றோம். உறவினர்களை உதாசீனம் செய்திருக்கின்றோம். அவை அனைத்தையும் மன்னித்து கிருபை செய்வாயாக!
  6. யா அல்லாஹ்! எங்களின் பாவங்களை நினைத் துப் பார்த்தால் மலை போல் குவிந்துள்ளன.
  7. கடல் அலை போல் காட்சி தருகின்றன. உன்னு டைய கருணையினால் மன்னித்து கிருபை செய்வாயாக!
  1. யா அல்லாஹ்! எங்களுடைய நப்ஸு என்னும் ஆன்மா பாவத்தைத் தூண்டிக் கொண்டு இருக்கின்றது. நப்ஸை நல்வழிப்படுத்துவாயாக!
  2. யா அல்லாஹ்! எங்களுடைய நப்ஸில் கலந்து விட்ட ஷைத்தானுடைய தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகின்றோம் ரஹ்மானே!
  3. யா அல்லாஹ்! நாங்கள் ஷைத்தானுடைய சூழ்ச்சியில், அவனுடைய வலையில் வீழ்ந்து விட்டோம். அவனுடைய தீங்கை விட்டும் பாதுகாவல் தந்து அருள் புரிவாயாக!
  4. யா அல்லாஹ்! நாங்கள் பாவம்தான் அதிக மாகச் செய்திருக்கின்றோம். நன்மையே மிகக் குறைவாக செய்திருக்கின்றோம். நீ கருணை காட்டவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளர் களாக ஆகிவிடுவோம்; எங்களை மன்னித்து கிருபை செய்வாயாக!
  5. யா அல்லாஹ்! நாங்கள் நன்மை என்ற பெயரில் பாவங்களைச் சம்பாதித்து விடுகின்றோம். இபாதத்தில் குறை செய்து விடுகின்றோம். அவைகளை மன்னித்து, சாலிஹான தன்மை யுடையவர்களாக ஆக்குவாயாக!
  1. யா அல்லாஹ்! எங்கள் வியாபாரத்தில், தொழிலில் பரக்கத் செய்வாயாக!

24.யா அல்லாஹ்! எங்கள் விவசாயத்தில் ரஹ்மத்தைத் தருவாயாக!

  1. யா அல்லாஹ்! எங்கள் தொழிலிலும், வியாபாரத் திலும் முன்னேற்றத்தைத் தருவாயாக!

26.யா அல்லாஹ்! எங்களின் தொழிலிலும், வியாபாரத்திலும் முடக்கத்தை நீக்குவாயாக!

  1. யா அல்லாஹ்! எங்களின் தொழிலில், வியாபா ரத்தில் ஜின், ஷைத்தான் உடைய தீங்கை விட்டும், கண் திருஷ்டி, ஓமளிப்பு, சூனியத்தின் கெடுதி களை விட்டும், போட்டி, பொறாமைக்காரர்களின் தீங்கை விட்டும் காப்பாற்றுவாயாக!
  2. யா அல்லாஹ்! எங்களின் பலருக்கு தொழில் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு தொழில் வளத்தை ஏற்படுத்துவாயாக!
  3. யா அல்லாஹ்! எங்களின் சிலருக்கு எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டம் ஏற்படுகிறது. கஷ்டப்படுகிறார்கள்; கவலைப்படுகிறார்கள். அவர்களின் குற்றங்களை மன்னித்து அவர் களுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவாயாக!
  4. யா அல்லாஹ்! எங்களின் இல்லங்களில் பரகத்தை ஏற்படுத்துவாயாக!
  1. யா அல்லாஹ்! எங்களின் இல்லங்களில் ஜின், ஷைத்தான், பேய், பிசாசு, மோகினி, சூனியம் போற்றவற்றை விட்டும் தூரப்படுத்துவாயாக!
  2. யா அல்லாஹ்! எங்களின் குடும்பங்களில் நிம்மதியையும், ரஹ்மத்தையும் தருவாயாக!
  3. யா அல்லாஹ்! எங்களின் குடும்பங்களில் ஒற்றுமையை ஏற்படுத்துவாயாக!
  4. யா அல்லாஹ்! எங்களின் குடும்பங்களில் உறவு முறைகளை மதித்தும், கண்ணியப்படுத்தி வாழ்வதற்கும் தவ்ஃபீக் செய்வாயாக!
  5. யா அல்லாஹ்! எங்களின் பெற்றோர்களுக்கு நன்றி செய்யக்கூடியவர்களாக எங்களை ஆக்கி வைப்பாயாக!
  6. யா அல்லாஹ்! எங்களின் பெரியவர், சிறியவர்களின் மீது அன்பு காட்டக் கூடியவர்களாகவும், சிறியவர்கள், பெரியவர் களின் மீது மரியாதை செய்யக்கூடியவர் களாகவும் ஆக்கி வைப்பாயாக!
  7. யா அல்லாஹ்! எங்களின் மனைவி, மக்களை கண்குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக!
  8. யா அல்லாஹ்! எங்கள் அனைவர்களுக்கும் நோயற்ற வாழ்வையும், நிறைவான செல்வத்தையும் தந்து அருள் புரிவாயாக!
  1. யா அல்லாஹ்! எங்களுக்கு நோய் ஏற்படுமே யானால் சீக்கிரமாக குணமாகுவதற்கு கிருபை செய்வாயாக!
  2. யா அல்லாஹ்! பெரிய பெரிய வியாதிகளை விட்டும், கேவலப்படுத்துகின்ற நோய்களை விட்டும், அலக்களிக்கின்ற அனுகூலத்தை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக!
  3. யா அல்லாஹ்! என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியாத வியாதிகளை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக!
  4. யா அல்லாஹ்! திடீர் சோதனைகளை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக!
  5. யா அல்லாஹ்! திடீர் மவ்த்தை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக!
  6. யா அல்லாஹ்! எங்களில் பலருக்கு கை வலி, கால் வலி, இடுப்பு வலி, தலைவலி என்று நீடித்த நோயாளிகளாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஷிஃபாவைத் தருவாயாக!
  7. யா அல்லாஹ்! எங்களின் பலர் பற்பல வியாதி களுடன் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக் கிறார்கள். அவர்களுக்கு முழுமையான சுகத் தையும், ஷிஃபாவையும் தருவாயாக!
  1. யா அல்லாஹ்! கொடிய விாதிகளான கேன்ஸர், ஹார்ட் அட்டாக் போன்ற வியாதிகளையும், என்ன வியாதிகள் என்றுகூட கண்டுபிடிக்க முடியாத வியாதிகளை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக!
  2. யா அல்லாஹ்! நாங்கள் வைத்திருக்கும் வாகனத்தின் மூலம் ரஹ்மத்தையும், ராஹத்தையும் தருவாயாக!
  3. யா அல்லாஹ்! நாங்கள் வைத்திருக்கும் வாகனத்தின்மூலம் சோதனை பிடித்துவிடாதே! அதேபோல் சிறுவயதில் மௌத்தாகுவதை விட்டும் பாதுகாப்பாயாக!
  4. யா அல்லாஹ்! எங்களின் குழந்தைகளை சாலிஹானவர்களாக ஆக்குவாயாக!
  5. யா அல்லாஹ்! எங்கள் குழந்தைகளுக்கு கல்வி ஞானத்தையும், அறிவு என்ற பொக்கி ஷத்தையும் திறந்து வைப்பாயாக!
  6. யா அல்லாஹ்! எங்கள் குழந்தைகள் படித்து பட்டதாரிகளாகவும், அரசாங்க வேலையில் அமருகின்ற பாக்கியத்தையும் தந்தருள் வாயாக!
  7. யா அல்லாஹ்! எங்கள் அனைவர்களுக்கும் உன்னை அறிந்து வழிபடுகின்ற ஆற்றலைத் தருவாயாக!
  1. யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களில் ஏற்படு கிற கெட்ட குணங்களை விட்டும் நீக்கி நற்குணமுள்ளவர்களாக ஆக்குவாயாக!
  2. யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களில் பொய், புரட்டு, பொறாமை, சூது, கோபம், சண்டை, சச்சரவு, அபகரிக்கும் எண்ணம் போன்ற கெட்ட குணங்களை நீக்கி நல்ல எண்ணத்துடன் வாழ தவ்ஃபீக் செய்வாயாக!
  3. யா அல்லாஹ்! அடுத்தவரின் குடும்பங்களை நாசப்படுத்துவதும், கேவலப்படுத்துவதும், பிரித்து வைப்பதும் போன்ற ஷைத்தானிய்யத் தான தீய எண்ணங்களை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
  4. யா அல்லாஹ்! அடுத்தவரின் மனதை புண்படுத்தி ஆனந்தம் அடையும் அவலத்தை நீக்கி, நல்லதைச் செய்யக்கூடியவர்களாக எங்களை ஆக்குவாயாக!
  5. யா அல்லாஹ்! நாங்கள் பக்கத்து வீட்டாருடன் பண்புடனும், அடுத்த வீட்டாருடன் அன்புடனும், மக்களுடன் நேசத்துடன் நடப்பதற்கு அருள் புரிவாயாக!
  6. யா அல்லாஹ்! நீ கூறுகிறாய்: எண்ணத்தில் சிலது பாவம். ஆனால், எங்கள் எண்ணங்கள் முழுக்க பாவங்கள் நிறைந்திருக்கின்றன ரஹ்மானே! எங்கள் ண்ணங்களைத் தூய்மைப் படுத்துவாயாக!
  1. யா அல்லாஹ்! நாங்கள் ஷைத்தானுடைய சூழ்ச்சியில் வீழ்ந்துவிட்டோம். ஆகவே உன்னை மறந்துவிட்டோம். ரஹ்மானே! அவனு டைய பிடியிலிருந்து காப்பாற்றி உன்னை நினைத்து வாழ அருள்புரிவாயாக!
  2. யா அல்லாஹ்! உலக இன்பங்களில் மூழ்கி விட்டோம். அதிக பேராசையுடையவர்களாக ஆகிவிட்டோம். அதனால், மறுமையை மறந்து விட்டோம். ரஹ்மானே! எங்களை மன்னித்து நேர்வழி காட்டுவாயாக!
  3. யா அல்லாஹ்! எங்களை வழிகெடுக்கும் கூட்டங்கள் நிறைந்து விட்டன. ஷைத்தானு டைய விஷமத்தனம் எங்களை அடிமைப் படுத்திவிட்டது.ரஹ்மானே! நீ கிருபை செய்யா விட்டால் நாங்கள் நஷ்டவாளர்களாக ஆகிவிடு வோம்.எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!
  4. யா அல்லாஹ்! எங்களை சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழ தவ்ஃபீக் செய்வாயாக!
  5. யா அல்லாஹ்! நாங்கள் ஐங்காலக் கடமைகளைத் தவறாமல் தொழுவதற்கும், விட்டுவிட்டுத் தொழுவதை விட்டும் நீக்கி நிரந்தர தொழுகையாளிகளாக ஆக்குவாயாக!
  6. யா அல்லாஹ்! நாங்கள் சுன்த்தான, நபிலான வணக்கங்களைப் பேணி நடப்பவர் களாகவும், தொழுகையை கண்குளிர்ச்சியான தாகவும் ஆக்குவாயாக!
  1. யா அல்லாஹ்! ரமலான் மாதம் முழுவதும் கடமையான நோன்பு பிடிப்பவராகவும், மற்ற காலங்களில் சுன்னத்தான, நபிலான நோன்பைப் பிடிப்பவராகவும் ஆக்கு வாயாக!
  2. யா அல்லாஹ்! ஜக்காத் என்ற கடமையைப் பேணிச் செய்கின்ற பேரன்பைத் தந்தருள் வாயாக!
  3. யா அல்லாஹ்! எங்கள் அனைவருக்கும் ஹஜ்ஜு செய்யக்கூடிய பாக்கியத்தைத் தருவாயாக!
  4. யா அல்லாஹ்! நாங்கள் ஹஜ்ஜுக் கடமை யைப் பெற்று அதிகப்படியான தவாபுகளையும், உபரிய்யான அதிக உம்ராக்களையும், குர்ஆன் ஓதும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக!
  5. யா அல்லாஹ்! ஹஜ்ஜுடைய காரியங்களில் தீமையான எண்ணங்களை விட்டும், பாவமான காரியங்களை விட்டும் பாதுகாத்து உனக்காகவே செய்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக!
  6. யா அல்லாஹ்! மக்கத்து ராஜா, மதீனத்து ரோஜா, மன்னர் மஹ்மூதைக் காணுகின்ற பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
  7. யா அல்லாஹ்! உனது ஹபீப், மன்னர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அதிகம் அதிகமாக
  8. ஸலாம் சொல்லும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
  1. யா அல்லாஹ்! அன்னவர்களின் மீது அதிகம் அதிகமாக ஸலவாத்து சொல்லும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
  2. யா அல்லாஹ்! அன்னவர்களைக் கனவிலும், நினைவிலும் காணுகின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக!
  3. யா அல்லாஹ்! அன்னவர்களின் நல்வாழ்த் துக்கு உரித்தவர்களாக ஆக்கி அருள் புரிவாயாக!
  4. யா அல்லாஹ்! நாங்கள் வாழுகின்ற காலம் முழுவதும் உன்னை அஞ்சி வாழ்வதற்கும், உனது ஹபீபை நேசித்து வாழ்வதற்கும் தவ்ஃபீக் செய்வாயாக!
  5. யா அல்லாஹ்! எங்களைக் கடன் இல்லாதவர் களாகவும், கடன் சுமை உள்ளவர்களுக்கு கடனை அடைப்பதற்கும் தவ்ஃபீக் செய்வாயாக!
  6. யா அல்லாஹ்! கடன் வாங்கும் போது சீக்கிரம் கடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தருவாயாக!
  7. யா அல்லாஹ்! கடன் இருக்கும் நிலையில் மவ்த்தை ஏற்படுத்தாதே ரஹ்மானே!
  1. யா அல்லாஹ்! எங்கு திரும்பிப் பார்த்தாலும் வட்டி என்ற கொடுமையான பாவங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!
  2. யா அல்லாஹ்! ஹராமான உணவுகளை விட்டும், சந்தேகம் கொள்ளும் உணவுகளை சாப்பிடுவதை விட்டும் பாதுகாப்பாயாக!
  3. யா அல்லாஹ்! எங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவாயாக!
  4. யா அல்லாஹ்! எங்கள் உறவினர்கள், எங்கள் குடும்பத்தார்கள், எங்களுக்கு முந்திவிட்டவர் கள் அவர்களின் பாவங்களை மன்னித்து மண்ணறையை மணமாக்குவாயாக!
  5. யா அல்லாஹ்! அவர்களுக்கு கப்ருடைய நெருக்கடியை விட்டும், வேதனையை விட்டும் பாதுகாப்பாயாக!
  6. யா அல்லாஹ்! இன்னும் யார் யாருடைய கப்ரில் வேதனை நடக்கின்றதோ அவர்களை மன்னித்து கப்ரை சுவனத்துப் பூஞ்சோலை யாக ஆக்குவாயாக!

85.யா அல்லாஹ்! எங்களுக்கும் எங்களின் முன்னோர்களுக்கும் சுவர்க்கத்தை வாஜிபாக்கி, நரகத்தை ஹராமாக்கி வைப்பாயாக!

  1. யா அல்லாஹ்! எங்கள் அனைவர்களுக்கும் நன்மை என்ற பட்டோலையை வலது கரத்தில் கொடுத்து, சிராத்துல் முஸ்தகீம் என்ற பாலத்தை சீக்கிரமாக கடந்து சென்று சுவனபதியை அடையும் பாக்கியத்தைத் தந்து அருள்புரிவாயாக!
  2. யா அல்லாஹ்! எங்கள் அனைவர்களுக்கும் லிவாஹுல் ஹம்து என்ற கொடியின் கீழ் அமருகின்ற பாக்கியத்தைத் தருவாயாக!
  3. யா அல்லாஹ்! நாளை கியாமத் நாளில் நீதி விசாரணை செய்யும் நாளில் வெற்றி பெற்ற கூட்டத்தார்களில் எங்களையும் ஆக்கி வைப்பாயாக!
  4. யா அல்லாஹ்! அப்படி நீதி விசாரணை நாளில் தலைக்குமேல் சூரியன் இருக்கும் வேலையில் தனக்குப் பிடித்தமான ஏழு கூட்டத்தாரைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய அர்ஷுடைய நிழலை வழங்குவாயே அப்படிப் பட்ட கூட்டத்தார்களில் எங்களை ஆக்கி அருள்புரிவாயாக!
  5. யா அல்லாஹ்! ஹவ்லுல் கவதர் என்ற நீர்த் தடாகத்தில் கண்மணி நபிகள் நாதரின் கரத்தில் வாங்கி அருந்தும் பாக்கியத்தைத் தருவாயாக!
  1. யா அல்லாஹ்! எங்கள் அனைவர்களுக்கும் உனது லிகா வாயாக! -சந்திப்பை வழங்கு
  2. யா அல்லாஹ்! கண்மணி நபிகள் நாதர் (ஸல்) அவர்களின் ஷபாஅத்திற்கு உரித்தவர்களாக எங்களையும் ஆக்கி அருள்புரிவாயாக!
  3. யா அல்லாஹ்! நாங்கள் ஈமானோடு பிறந்திருக் கின்றோம். ஈமானோடு வாழ்ந்து, ஈமானோடு மௌத்தாக அருள்புரிவாயாக!

94.யா அல்லாஹ்! நாளை மறுமை நாளில் எங்களை நல்லடியார்களின் கூட்டத்தில் ஆக்குவாயாக!

95.யா அல்லாஹ்! நாங்கள் மௌத்தாகும் வேலையில் கண்மணி நபிகள் நாதரைப் பார்த்து, திருக்கலிமா “லா இலாஹ ” இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று சொல்லி ரூஹ் பிரியும் பாக்கியத்தைத் தருவாயாக!

  1. யா அல்லாஹ்! சுவர்க்கத்தில் உனது ஹபீபை அடிக்கடி காணும் பாக்கியத்தையும், அருகில் அமரக்கூடிய நற்பாக்கியத்தையும் எங்கள் அனைவர்களுக்கும் தருவாயாக! பு
  1. யா அல்லாஹ்! இந்த துஅவை உனது ஹபீப் கண்மணி நாதர் (ஸல்) அவர்களின் பொருட்டால் ஏற்றுக் கொள்வாயாக!
  2. யா அல்லாஹ்! நல்லோர்கள், நாதாக்கள், ஷுஹதாக்கள், முர்ஸலீன்கள், முத்தகீன்களின் பொருட்டால் ஏற்றுக் கொள்வாயாக!
  3. யா அல்லாஹ்! அண்ட கோளத்தையும் ஆட்சி செய்யும் அல்லாஹ்வே! உனது அளப் பெறும் கருணையினால் இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக!

அல்லாஹும்ம ரப்பனா தகப்பல் மின்னா மாகான ஸாலிஹவ் வஅஸ்லிஹ் லனா மாகான பாசிதா

அல்லாஹும்ம ரப்பனா தகப்பல் தவ்பதனா, வஃஸில் கவ்பதனா, வஉஜிப் தஃவதனா, வதப்பித் ஹுஜ்ஜதனா, வசத்தித் லிசானனா, வஹ்தி கல்பனா, வஸ்லுல் சகீமத ஸத்ரினா யா அர்ஹமர் ராஹிமீன்.

அல்லாஹும்ம இன்ன லனா துனூபன் பீமா பைனனா வபைனக்க வதுனூபன் பீமா பைனனா வபைன கல்கிக யாரப்பல் ஆலமீன்.

அல்லாஹும்ம பல்லிஃ முராதனா, வஹ்ஸில் மகாசிதனா, வதம்மிம் நிய்யாத்தினா யா அர்ஹமர் ராஹிமீன்.

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்.

வஸல்லல்லாஹு தஆலா அலா கைரி கல்கிஹி சைய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.

சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மா யஸிபூன். வஸலாமுன் அலல் முர்ஸலீன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

தவ்பா

தவ்பா

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஸலவாத்துஸ் ஸஆதா

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ عَدَدَ مَا نِي عِلْمِ اللَّهِ صَلَاةً دَائِمَةً بِدَوَامِ مُلْكِ اللَّهِ

அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யிதினா முஹம்மதின் அதத மா ஃபீ இல்மில்லாஹி ஸலாத்தன் தாஇமத்தன் பிதவாமி முல்கில்லாஹ்.