Arabic |
درود تنجينا (ورود نجات) اللهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلوةٌتُنَجَيْنَا بِهَا مِنْ جَمِيعِ الْأَهْوَالِ وَالْأَفَاتِ وَتَقْضِي لَنَا بِهَا جَمِيعَ الْحَاجَاتِ وَ تُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيعِ السَّيِّئَاتِ وَتَرْفَعْنَا بِهَا عِنْدَكَ اعْلَى الدَّرَجَاتِ وَتُبَلِّغْنَا بِهَا أَقْصَى الْغَايَاتِ مِنْ جَمِيعِالْخَيْرَاتِ فِي الحَيَوةِ وَبَعْدَ الْمَمَاتِإِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ |
தமிழில் |
ஸலவாத்துன் துன்ஜீனா அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின் ஸலாத்தன் துனஜ்ஜீனா பிஹா மின் ஜமீஇல் அஹ்வாலி வல்ஆஃபாத் வதக்ளீ லனா பிஹா ஜமீ அல் ஹாஜாத். வது தஹ்ஹிரு னா பிஹா மின் ஜமீயிஸ் ஸய்யி ஆத். வதர்பஉ னா பிஹா அஃலத்தரஜாத். வதுபல்லி குனா பிஹா அக்ஸல் ஙாயாத். மின் ஜமீஇல் கைராத்தி ஃபில் ஹயாத்தி வப அதல் மமாத், இன்னக அலா குல்லி ஷைஇன் கதீர். |
ஓதுவதினால் கிடைக்கும் பலன்கள் |
துன்பம் நீங்கும் இதனைத் துன்பத்தில் சிக்கிக் கொண்டிருப்பவன் ஆயிரம் தடவை ஓதின் அவன் இறையருளால் துன்பம் நீங்கப் பெறுவான்.ஒரு தடவை ஷைகு ஸாலிஹ் மூஸா லரீரு (ரஹ்) அவர்கள் கப்பலில் பிரயாணம் செய்தபொழுது கப்பல் கடும் புயலில் அகப்பட்டுத் தத்தளித்தது. அப்பொழுது ஒரு சிறு தூக்கம் அவர்களை ஆட்கொள்ள பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸவவாத் தைக் கற்றுக் கொடுத்து இதனை அவர்களும் கப்பலிலுள்ள ஏனையோரும் ஆயிரம் தடவை ஓதுமாறு பணித்துவிட்டு மறைந்தனர். அவ்வாறே அவர்களும் ஏனையோரும் இதனை ஓதத் துவங்கி, முந்நூறு தடவை ஓதிவரும் பொழுதே புயல் அடங்கியது. அவர்கள் அனைவரும் இறையருளால் மீட்சி பெற்றார்கள் ,,,,,,,,,,,,,,, . இரணம் அதிகரிக்கும் இதனை ஒருவன் வழக்கமாக ஆயிரம் தடவை ஓதிவரின் அவனின் இரணம் அதிகரித்து அவன் செல்வனாவான் .நாட்டம் நிறைவேறும் இதனை ஒருவன் நள்ளிறவு ஆயிரம் தடவை ஓதி இறைவனிடம் இறைஞ்சின் அவன் நாடிய நாட்டங்கள் நிறைவேறும், மின்னலின் வேகத்தில் அவனுடைய இறைஞ்சுதல் இறை சந்நிதானத்தை எய்தும் என்றும் கூறப்படுகிறது. இது அர்ஷின் புதையல்களில் ஒன்று’ என ஷைகுல் அக்பர் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அப்பொழுது |
Leave a Reply