எனது அன்பான இஸ்லாமிய சொந்தங்களே!
கேட்பது கிடைக்கும் வஜீபாக்கள் என்ற தலைப்பில்
அற்புதமான ஔராதுகள் கொடுக்கப்பட்டுள்ளது
முதலில் வஜீபா என்றால்
இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய திரும்பத் திரும்ப சொல்லப்படும் ஒரு பிரார்த்தனை அல்லது ஒரு நினைவூட்டல் இதை தனிப்பட்ட தேவையை பூர்த்தி செய்யவும் இன்னும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளவும் பயன்படுத்தலாம்
ஔராது என்றால் என்ன
ஔராது என்பதற்கு கருவி என்றும் மனப்பயிற்சி என்றும் சொல்லப்படும் நியாயமாக ஓதி வந்தால் கஷ்டங்களை நீக்கும் கருவியாக பயன்படும் முறைப்படி ஓதி வந்தால் மனப் பக்குவத்தையும் ஆத்ம ஞானத்தையும் உயர்த்தும்
கேட்பது கிடைக்கும் வஜீபாக்கள் என்ற தலைப்பில் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்கள் மற்றும் பத்ரு ஸஹாபாக்களின் திருப்பெயர்கள் மற்றும் கன்ஜுல் அர்ஷ் மற்றும் துஆ ஜமீல் மற்றும் 40 ரப்பனா துஆக்கள் மற்றும் திருக்குர்ஆனில் பொறிக்கப்பட்ட ஸஜ்தா ஆயத்துக்கள் மற்றும் அய்யாமுல் ஃபீல் இன்னும் ஸலாத்துன் நாரியா போன்ற அறிய பொக்கிஷங்களை ஒன்றாக தொகுத்து வழங்கி இன்னும் மக்களுக்கு இலகுவாக இருக்க அரபி தமிழ் இன்னும் பொருளுடன் கொடுத்துள்ளோம்
இதை முறைப்படி ஓதி வந்தால் பிரச்சனைகளை தடுக்கும் ஆயுதமாக செயல்படும் நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகும் துஆக்களை அல்லாஹ்விடத்தில் கொண்டு செல்லும் அற்புத சக்தியாகும் மேலும் இதை ஓதக்கூடிய முறையில் தினசரி ஓதி வந்தால் கஷ்டங்கள் நீங்கும் பிரச்சனைகள் தீரும் கடன்கள் நீங்கும் வறுமை ஒழியும் நோய் தீரும் ஆபத்துக்கள் தடுக்கப்படும் சைத்தான் ஜின் போன்ற அனைத்து தீங்குகளில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் மேலும் இந்த அவ்ராதுகளை பயபக்தியுடன் ஓதி வந்தால் நினைத்த காரியத்தை வென்று விடலாம் வீட்டில் பரக்கத் ஏற்படும் மன நிம்மதி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் இன்னும் இதை ஓதக் கூடியவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஈமான் அதிகரித்துக் கொண்டே இருக்கும் யாரும் அறியாத அறிவையும் ஞானத்தை அல்லாஹ் வழங்குவான் மேலும் இதை ஓதக்கூடிய அடியார்களுக்கு அல்லாஹுத்தஆலா தனிப்பட்ட அன்பை வழங்குவான் மேலும் மக்களிடம் மதிப்பும் கண்ணியமும் அந்தஸ்தும் உயர்த்தப்படும் யாவரும் பிரியம் கொள்வார்கள் மேலும் பதவி அந்தஸ்து செல்வாக்கு என அனைத்தும் தேடி வரும் சுருக்கமாகச் சொன்னால் நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்காத பெரு வாழ்வை அல்லாஹ் நமக்கு இரு உலகிலும் வழங்குவான் மேலும் இந்த வஜீபாக்களை ஓதுவதால் இவ்வுலகில் மட்டுமல்ல மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்தை அடையலாம் எனவே பொக்கிஷமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிறப்புமிக்க வஜீபாக்களை நாம் அன்றாடம் ஓதுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
அஸ்மாவுல் ஹுஸ்னாவின் பலன்கள்
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன அவற்றை கொண்டு அவனை அழையுங்கள்
( அல்குர்ஆன்)- 7 :180)
என்று இறைவன் தன்னை எவ்வாறு அழைத்து உதவி கேட்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறான்
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் தொண்ணூற்றொன்பது
திருநாமங்கள் உள்ளன அவற்றை மனனமிட்டு ஓதி வருகிறவர்கள் சொர்க்கம் சென்றிடுவார் என ரசூல் ஸல்லல்லாஹூ ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள் கூறினார்கள்
( மிஸ்காத்)
அல்லாஹ்வின் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்களுக்கும் தனி தனி சிறப்புக்கள் உண்டு அதை கொண்டு அழைப்பவர்களுக்கு ஏறாளமான நன்மைகளையும் பலன்களையும் இம்மையிலும் மறுமையிலும் வாரி வழங்குகிறது
மேலும் இந்த பெயர்களைக் கொண்டு நமது தேவைகளை முன் வைத்தால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்
أَسْمَاءُ الْحُسْنَى |
القُدُّوسُ | المَلِكُ | الرَّحْمَن | هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُو |
العَزِيزُ | المُهَيْمِنُ | المُؤْمِنُ | السَّلامُ |
البَارِئُ | الخَالِقُ | المُتَكَبِّرُ | الجَبَّارُ |
الْوَهَّابُ | الْقَهَّارُ | الْغَفَّارُ | المُصَوِّرُ |
الْقَابِضُ | اَلْعَلِيْمُ | الْفَتَّاحُ | الرَّزَّاقُ |
الْمُعِزُّ | الرَّافِعُ | الْخَافِضُ | الْبَاسِطُ |
الْحَكَمُ | الْبَصِيرُ | السَّمِيعُ | المُذِلُّ |
الْحَلِيمُ | الْخَبِيرُ | اللَّطِيفُ | الْعَدْلُ |
الْعَلِيُّ | الشَّكُورُ | الْغَفُورُ | الْعَظِيمُ |
الْحسِيبُ | المُقيِت | الْحَفِيظُ | الْكَبِيرُ |
الْمُجِيبُ | الرَّقِيبُ | الْكَرِيمُ | الْجَلِيلُ |
الْمَجِيدُ | الْوَدُودُ | الْحَكِيمُ | الْوَاسِعُ |
الْوَكِيلُ | الْحَقُّ | الشَّهِيدُ | الْبَاعِثُ |
الْحَمِيدُ | الْوَلِيُّ | الْمَتِينُ | الْقَوِيُّ |
الْمُحْيِي | الْمُعِيدُ | الْمُبْدِئُ | الْمُحْصِي |
الْوَاجِدُ | الْقَيُّومُ | الْحَيُّ | اَلْمُمِيتُ |
الصَّمَدُ | اَلاَحَدُ | الْواحِدُ | الْمَاجِدُ |
الْمُؤَخِّرُ | الْمُقَدِّمُ | الْمُقْتَدِرُ | الْقَادِرُ |
الْبَاطِنُ | الظَّاهِرُ | الآخِرُ | الأوَّلُ |
التَّوَابُ | الْبَرُّ | الْمُتَعَالِي | الْوَالِي |
مَالِكُ الْمُلْكِ | الرَّؤُوفُ | العَفُوُّ | الْمُنْتَقِمُ |
الْغَنِيُّ | الْجَامِعُ | الْمُقْسِطُ | ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ |
النَّافِعُ | الضَّارَّ | اَلْمَانِعُ | الْمُغْنِي |
اَلْبَاقِي | الْبَدِيعُ | الْهَادِي | النُّورُ |
الصَّبُورُ | الرَّشِيدُ | الْوَارِثُ |
அஸ்மாவுல் ஹுஸ்னா |
அர்ரஹ்மான் | அர்ரஹிம் | அல் மலிக்-பேரரசன் | அல் குத்தூஸ்– மிகப் பரிசுத்தமானவன் |
அஸ்ஸலாம்– சாந்தி மயமானவன் | அல் முஃமின்-அபயமளிக்கிறவன் | அல் முஹைமின்-கண்காணிப்பவன் | அல் அஜீஜ்– மிகைத்தவன் |
அல் ஜப்பார்–அடக்கியாள்கிறவன் | அல் முதகப்பிர்–பெருமைக்குரியவன் | அல் காலிக்-படைப்பவன் | அல் பாரிஉ– படைப்பை ஒழுங்கு படுத்துபவன் |
அல் முஸவ்விர்-உருவமளிப்பவன் | அல் கஃப்ஃபார்– மிக்க மன்னிப்பவன் | அல் கஹ்ஹார்-அடக்கி ஆள்பவன் | அல் வஹ்ஹாப்-கொடையாளன் |
அர் ரஜ்ஜாக்-உணவளிப்பவன் | அல்ஃபத்தாஹ்–தீர்ப்பு வழங்குகிறவன் | அல் அலீம்– மிக அறிபவன் | அல் காபிள்-கைப்பற்றுவோன் |
அல் பாஸித்– விரிவாக்குபவன் | அல் காஃபிள் – தாழ்த்துவோன் | அர் ராஃபிஃ-உயர்த்துவோன் | அல் முஇஜ்ஜு– கண்ணியப்படுத்துவோன் |
அல் முதில்லு–இழிவடையச்செய்பவன் | அஸ்ஸமீஉ-செவியேற்பவன் | அல் பஸீர்-பார்ப்பவன் | அல் ஹகம்-தீர்ப்பளிப்பவன் |
அல் அத்லு– நீதியுள்ளவன் | அல் லதீஃப்–நுட்பமாகச் செய்கிறவன் | அல் ஃகபீர்-நன்கறிகிறவன் | அல் ஹலீம்–சகிப்புத் தன்மையுடையவன் |
அல் அழீம்-மகத்துவமிக்கவன் | அல் கஃபூர்– மிகவும் மன்னிப்பவன் | அஷ் ஷகூர்– நன்றி பாராட்டுபவன் | அல் அலிய்யு– மிக உயர்ந்தவன் |
அல் கபீர்-மிகப்பெரியவன் | அல் ஹஃபீழ்-பாதுகாவலன் | அல் முகீத்– ஆற்றல் உள்ளவன் | அல் ஹஸீப்-கணக்கெடுப்பவன் |
அல் ஜலீல்-கண்ணியமானவன் | அல் கரீம்– தயாளன் | அர் ரகீப்– கண்காணிப்பவன் | அல் முஜீப்– பதிலளிப்பவன் |
அல் வாஸிஃ-விசாலமானவன் | அல் ஹகீம்– ஞானமுடையோன் | அல் வதூத்– பிரியமுடையவன் | அல் மஜீத்– மகிமை வாய்ந்தவன் |
அல் பாஇத்–உயிர்த்தெழச் செய்பவன் | அஷ் ஷஹீத்– சாட்சியாளன் | அல் ஹக்– உண்மையானவன் | அல் வகீல்– வலிமை மிக்கவன் |
அல் கவிய்யு – | அல் ம(த்)தீன்-உறுதியானவன் | அல் வலிய்யு-பாதுகாவலன் | அல் ஹமீத்-புகழுக்குரியவன் |
அல் முஹ்ஸி–கணக்கிட்டு வைப்பவன் | அல் முப்திஉ-துவங்குவோன் | அல் மூஈத் -மீளச்செய்பவன் | அல் முஹ்யீ-உயிர்ப்பிக்கிறவன் |
அல் முமீத்– மரணிக்கச் செய்பவன் | அல் ஹய்யு– நித்திய ஜீவன் | அல் கய்யூம் –நிலைத்திருப்பவன் | அல் வாஜித்-என்றும் இருப்பவன் |
அல் மாஜித் மகிமை வாய்ந்தவன் | அல் வாஹித்-ஏகன் | அல் அஹத்-ஒருவன் | அஸ் ஸமத்-தேவையற்றவன் |
அல் காதிர் -சக்தியுள்ளவன் | அல் முக்ததிர்-ஆற்றலுடையவன் | அல் முகத்திம்-முற்படுத்துவோன் | அல் முஅக்ஃகிர்-பிற்படுத்துவோன் |
அல் அவ்வல்-முதலாமவன் | அல் ஆகிர்-கடைசியானவன் | அழ் ழாஹிர்– மேலானவன் | அல் பா(த்)தின் – அந்தரங்கமானவன் |
அவ்வாலீ -உதவியாளன் | அல் முதஆலீ-மிக உயர்ந்தவன் | அல் பர்ரு–நன்மை செய்கிறவன் | அத் தவ்வாப்-பாவ மன்னிப்பை ஏற்பவன் |
அல் முன்தகிம் – தண்டிப்பவன் | அல் அஃபுவ்வு -மன்னிப்பவன் | அர் ரஊஃப்-இரக்கமுடையவன் | மாலிகுல் முல்க்– ஆட்சிக்கு அதிபதி |
துல்ஜலாலிவல் இக்ராம்–சங்கையும் உள்ளவன் | அல் முக்ஸித்-நீதியானவன் | அல் ஜாமிஃ– ஒன்று சேர்ப்பவன் | அல் கனிய்யு-தேவையற்றவன் |
அல் முக்னீ–தேவையற்றவனாக்குவோன் | அல் மானிஃ– தடுப்பவன் | அள் ளார்ரு-இடரளிப்பவன் | அன் நாஃபிஃ-நற் பயனளிப்பவன் |
அன் நூர்-ஒளியானவன் | அல் ஹாதி– நேர்வழி காட்டுபவன் | அல் பதீஉ-முன்மாதிரியின்றி படைப்பவன் | அல் பாகீ-நிலையானவன் |
அல் வாரித்–அனந்தரம் பெறுவோன் | அர் ரஷீத்-நேர்வழி காட்டுவோன் | அஸ் ஸபூர்–பொறுமையுள்ளவன் |
அஸ்மாவுன் நபியின் பலன்கள்
அல்லாஹ்விற்கு அவனது குணநலன்களை சுட்டிக் காட்டும் பல பெயர்கள் இருப்பது போல அவனுடைய நேசத்திற்குறிய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன
அஸ்மாஉல் ஹுஸ்னாவை பொருளுணர்ந்து ஓதுவது போலவே இந்த அஸ்மாவுந் நபியையும் பொருளுணர்ந்து ஓதினால் நன்மைகளும் ஏறாளமான பலன்களும் கிடைக்கும் ஒவ்வொரு பெயரையும் ஓதுவதற்க்கு ஸலவாத் ஓதிய நன்மை கிடைக்கும் மேலும் அல்லாஹ்வின் கருணையும் அன்பும் கிடைக்கும்
மேலும் இந்த பெயர்களைக் கொண்டு நமது தேவைகளை முன் வைத்தால் நமது துஆக்கள் அனைத்தும் கபூலாகும்
اَسْمَاءُ النَّبِى |
مَحَمُودٌ | حَامِدٌ | أَحْمَدُ | مُحَمَّدٌ |
خَاتِمٌ | فَاتِحٌ | عَاقِبٌ | قَاسِمٌ |
سِرَاجٌ | دَاعٍ | مَاحٍ | حَاشِرٌ |
نَذِيرٌ | بَشِيرٌ | مُنِيرٌ | رَشِيدٌ |
نَبِيٌ طٰهٰ | رَسُولٌ | مَهْدٍ | هَادٍ |
شَفِيعٌ | مُدَّثِرٌ | مُزَّمِّلٌ | يٰسٓ |
مُصْطَفَى | حَبِيبٌ | عَلِيمٌ | خَلِيلٌ |
نَاصِرٌ | مُخْتَارٌ | مُجْتَبًى | مُرْتَضًى |
شهيدٌ | حَافِظٌ | قَائِمٌ | مَنْصُورٌ |
حُجَّةٌ | نُورٌ | حَكِيمٌ | عَادِلٌ |
مُطِيعٌ | مُؤْمِنٌ | اَبْطَحِىٌ | بُرْهَان |
صَادِقٌ | أمِيْنٌ | وَاعِظٌ | مُذْكِّرٌ |
مَكِّيٌ | صَاحِبٌ | نَاطِقٌ | مُصَدِّقٌ |
تِهَامِيٌ | هَاشِمِيٌ | عَرَبِيٌ | مَدَنِيٌ |
مُضَرَّيٌ | قُرَشِىٌ | نِزَاًرِيٌ | حِجَازِيٌ |
رَءُوفٌ | حَرِيصٌ | عَزِيزٌ | اُمِّى |
جَوَادٌ | غَنِيٌّ | يَتِيمٌ | رَحِيمٌ |
طاهِرٌ | طَيِّبٌ | عَالِمٌ | فَتَاحٌ |
سَيَّدٌ | فَصِيحٌ | خَطِيبٌ | مُطَهِّرٌ |
شَافٍ | بَآرٌّ | اِمَامٌ | مُتَّقٍ |
مَهْدِىٌ | مُقْتَصِدٌ | سَابِقٌ | مُتَوَسِطٌ |
أَوَّلٌ | مُبِينٌ | اُمِّى | حَقٌّ |
رَحْمَةٌ | بَاطِنٌ | ظَاهِرٌ | آخِرٌ |
نَاهٍ | اَمِرٌ | مُحَرِّمٌ | مُخَلَّلٌ |
مُبَلِّغٌ | مُنِيبٌ | قَرِيْبٌ | شَكُورٌ |
اَوْليٰ | حَبِيبٌ | حٰمِ | طٰسٓ |
وَصَلَّى اللهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابَةِ أَجْمَعِينَ |
அஸ்மாவுன் நபி |
முஹம்மத் | அஹ்மத் | ஹாமித் | மஹ்மூத் |
காஸிம் | ஆ(க்)கிப் | ஃபா(த்)திஹ் | ஹா(த்)திம் |
ஹாஸிர் | மாஹி | தாயி | சிராஜூன் |
ரஷீதுன் | முனீருன் | பஸீருன் | நதீருன் |
ஹாதின் | முஹ்தின் | ரஸூலுன் | நபிய்யுன் |
தாஹா | யாஸீன் | முஸ்ஸம்மிலுன் | முத்தஸ்ஸிருன் |
ஷஃfபீஉன் | ஹலீலுன் | கலீமுன் | முனக்கிய்யுன் |
முஸ்தfபா | முர்தலா | முஜ்தபா | முஹ்தாருன் |
-நாஸிருன் | மன்சூருன் | காயிமுன் | ஹாபீழுன் |
ஷஹீதுன் | ஆதில் | ஹகீமுன் | நூருன் |
ஹூஜ்ஜதுன் | புர்ஹானுன் | அப்தஹிய்யுன் | முஃமினுன் |
முதீஉன் | முதக்கிருன் | வாயிலுன் | அமீனுன் |
ஸாதிகுன் | முஸத்திகுன் | நாதிகுன் | ஸாஹிபுன் |
மக்கிய்யுன் | மதனிய்யுன் | அரபிய்யுன் | ஹாஷீமிய்யுன் |
திஹாமிய்யுன் | ஹீஜாஜிய்யுன் | நிஜாரிய்யுன் | குரஷீய்யுன் |
முழரிய்யுன் | உம்மிய்யுன் | அஜீஸூன் | ஹரீஸுன் |
ரவூfபூன் | ரஹீமுன் | யதீமுன் | ஙனிய்யுன் |
ஜவ்வாதுன் | பத்தாஹூன் | ஆலிமுன் | தைய்யிபுன் |
தாஹிருன் | முதஹ்ருன் | ஹதீபுன் | பஸீஹூன் |
சைய்யிதுன் | முத்தகின் | இமாமுன் | பார்ருன் |
ஷாfபின் | முதவஸ்ஸிதுன் | ஸாபிகுன் | முக்தஸிதுன் |
மஹ்தியுன் | ஹக்குன் | முபீனுன் | அவ்வலுன் |
ஆஹீருன் | லாஹீருன் | பாதினுன் | ரஹ்மதுன் |
முஹல்லிலுன் | முஹர்ரிமுன் | ஆமிருன் | நாஹின் |
ஷகூருன் | கரீபுன் | முனீபுன் | முபல்லிஙுன் |
தாஸீன் | ஹாமீம் | ஹபீபுன் | அவ்லா |
ஸல்லல்லாஹூ தஆலா அலா ஹைரி ஹல்கிஹி முஹம்மதிவ் வஅலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயீன் |
40 ரப்பனா துஆக்களின் சிறப்பு
பல நபிமார்கள் பல விதமான சூழ்நிலைகளில் ஓதிய திருக்குர்ஆனின் துஆக்கள் இதில் இருக்கும் ஒவ்வொரு துஆவும் மிக சக்தி வாய்ந்தது துஆக்களை கபூலாக்ககூடியது நம் வாழ்க்கை சிறப்பாக மாற நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் ஓத வேண்டியது பல நபிமார்கள் தன்னுடைய இயலாத சூழ்நிலையில் இதில் உள்ள துஆக்களில் ஏதேனும் ஒன்றை ஓதுவார்கள் அவர்களின் சிரமம் லேசாக்கப்பட்டது அவர்களின் துஆவும் உடனுக்குடன் அங்கீகரிக்கப்பட்டது இதில் உள்ள ஏதாவது ஒரு துஆவை நாமும் ஓதினால் இன்ஷா அல்லாஹ் நமது துஆவும் உடனுக்குடன் ஏற்கப்படும் இன்னும் இம்மை மறுமையில் அழகான பலன்களை பெற்றுத் தரும்
அல்லாஹ் குர்ஆனில் கூறிய நாற்பது ரப்பனா தூஆக்கள் |
رينا تَقَبَّلْ مِنَا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ |
ரப்பனா தகப்பல் மின்னா இன்னக அன்தஸ்ஸமீஉல் அலீம் (2:127)
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதனை) நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ (எங்களின் வேண்டுதலை) செவியேற்கிறவன். எங்கள் நிலைகளை நன்கு அறிந்தவன்
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَ مِنْ ذُرِّيَّتِنَا أُمَّةٌ مُسْلِمَةَ لَكَ وَارِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَاء إنَّكَ أَنتَ التَّوَّابُ الرّحيم |
ரப்பனா வஜ்அல்னா முஸ்லிமய்னி லக வமின் துர்ரிய்யதினா உம்மதம் முஸ்லிமதன்(ல்) லக வரினா மனாஸிகனா வதுப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர்ரஹீம் (2:128)
எங்கள் இறைவனே! எங்களை உனக்கு வழிப்படு கின்ற (முஸ்லிமான)வர்களாக நீ ஆக்கிவிடுவாயாக! எங்கள் சந்ததியிலிருந்து உனக்கு வழிப்படுகின்ற ஒரு (உம்மத்தை) சமுதாயத்தை ஆக்கிடுவாயாக! இன்னும் எங்களுக்கு (எங்களின் வணக்க வழிபாடுகளை) செய்முறைகளை அறிவித்துத் தருவாயாக! எங்களின் (தவ்பா) மன்னிப்பை ஏற்று எங்களை மன்னித் தருள்வாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன். மிக்க கிருபையாளன்.
رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةًۭ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ |
ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதவ் வஃfபில் ஆஃகிரதி ஹஸனதவ் வகினா அதாபன்னார் (2:201)
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் அழகிய நற்பாக்கியத்தையும் இன்னும் மறுமையில் அழகிய நற்பாக்கியத்தையும் வழங்கி, நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காத்தருள்வாயாக!
رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًۭا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ |
ரப்பனfப்ரிங் அலைனா ஸப்ரவ் வஸப்பித் அக்தாமனா வன்சுர்னா அலல் கவ்மில் காஃfபிரீன்
(2:250)
எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக. எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து வாயாக! நிராகரிப்பாளர்களான (இக்)கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக.
رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ |
ரப்பனா லாது ஆஃஹித்னா இன்னஸீனா அவ் அஹ்தஃனா (2:286)
எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து (குற்றம் செய்து) விட்டாலும் அல்லது நாங்கள் தவறு செய்து விட்டாலும் எங்களை நீ (குற்றம்) பிடித்து விடாதே!
رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ |
ரப்பனா வலாதஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதீன மின் கப்லினா (2:286)
எங்களுக்கு
எங்கள் இறைவனே! எங்களுக்கு முன்னிருந்தவர் களின் மீது நீ (பளுவைச்) சுமத்தியது போன்று எங்களின் மீது பளுவைச் சுமத்திவிடாதே!
رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ |
ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி வஃfபு அன்னா வங்fபிர்லனா வர்ஹம்னா அன்த மவ்லானா ஃfபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃfபிரீன்
(2:286)
எங்கள் இறைவனே! எங்களுக்கு எதில் சக்தி இல்லையோ அதனையும் எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்களை விட்டும் (எங்கள்) பாவங்களை அழித்து விடுவாயாக எங்களை மன்னித்து விடுவாயாக! எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே எங்கள் எஜமான். எனவே நிராகரிக்கும் கூட்டத்தினருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிந்தருள்வாயாக.
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ |
ரப்பனா லாதுஜிஃ குலூபனா பஃதஇத் ஹதைதனா வஹப்லனா மின்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப் (3:8)
எங்கள் இறைவனே! நீ எங்களை நேர்வழி செலுத்திய பின் எங்களுடைய இதயங்களை (நேர்வழியை விட்டும்) தவறுமாறு செய்துவிடாதே! உன் புறத்திலிருந்து நல்லருளை எங்களுக்கு வழங்கிடுவாயாக; நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்.
رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ |
ரப்பனா இன்னக ஜாமிஉன் நாஸி லியவ்மில் லாரைப ஃபீஹி இன்னல்லாஹ லாதுஹ்லிfபுல் மீஆத் (3:9)
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மனிதர்களை ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கிறாய் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்.
رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ |
ரப்பனா இன்னனா ஆமன்னா பங்ஃfபிர்லனா ஃதுனூபனா வகினா அதாபன்னார் (3:16)
எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம். எனவே எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னித்து நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காத்தருள்வாயாக!
رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ |
ரப்பனா ஆமன்னா பிமா அன்ஜல்த வத்தபஃனர் ரஸூல ஃfபக்துப்னா மஅஷ் ஷாஹிதீன் (3:53)
எங்கள் இறைவனே! நீ இறக்கிவைத்த (வேதத்)தை நாங்கள் ஈமான் கொண்டோம் (உன்) ரஸூலையும் பின்பற்றினோம். எனவே சாட்சி கூறுபவர்களுடன் எங்களை நீ பதிவு செய்வாயாக!
رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ |
ரப்பனஃங்fபிர்லனா துனூபனா வஇஸ்ராஃfபனா ஃபீ அம்ரினா வஸப்பித் அக்தாமனா வன்ஸுர்னா அலல் கவ்மில் காஃfபிரீன் (3:147)
எங்கள் இறைவனே! எங்களின் பாவங்களையும் எங்களின் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் எங்களுக்கு நீ மன்னித்தருள்வாயாக! எங்களின் பாதங்கஉன் வழியில்) நீ நிலைப்படுத்தி வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் கூட்டத்தினருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக.
رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَٰطِلًا سُبْحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ |
ரப்பனா மா ஹலக்த ஹாதா பாதிலா சுப்ஹானக
Fபகினா அதாபன்னார் (3:191
எங்கள் இறைவனே! (வானங்கள், பூமி) இதனை வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன் ஆகவே எங்களை நரக நெருப்பின் வேதனையை விட்டும் காத்தருள்வாயாக
رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنْ أَنصَارٍ |
ரப்பனாஇன்னக மன் துத்ஹிலின்னார fபகத் அஹ்ஜைதஹு வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
(3:192
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவரையும் நரகத்தில் புகுத்துகிறாயோ அவரைத் திடமாக நீ இழிவாக்கிவிட்டாய். அன்றியும் அநியாயக்காரர் களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை.
رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فَـَٔامَنَّاۚ |
ரப்பனா இன்னனா ஸமிஃனா முனாதியைய் யுனாதீ லில் ஈமானி அன் ஆமினூ பிரப்பிகும் fபஆமன்னா
(3.193)
எங்கள் இறைவனே! நீங்கள் உங்கள் இரட்சகனை (நம்புங்கள்) ஈமான் கொள்ளுங்கள் என்று ஈமானின் பால் அழைக்கும் ஒரு அழைப்பாளரை நாங்கள் செவியேற்றோம்.
رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ |
ரப்பனா fபங்fபிர்லனா துனூபனா வகfப்fபிர் அன்னா ஸய்யி ஆதினா வதவfப்fபனா மஅல் அப்ரார்
(3:193)
எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னித்து விடுவாயாக! எங்களுடைய தீமைகளை எங்களை விட்டும் அழித்து விடுவாயாக! நல்லோர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக.
رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ |
ரப்பனா வ ஆதினா மா வஅத்தனா அலா ருஸுலிக வலா துஹ்ஜினா யவ்மல் கியாமதி இன்னக லா துஹ்லிfபுல் மீஆத் (3:194)
எங்கள் இறைவனே! உன்னுடைய ரஸுல்களின் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு நீ தந்தருள்வாயாக! மறுமை நாளில் எங்களை நீ இழிவு படுத்தாது இருப்பாயாக, நிச்சயமாக நீ வாக்குறுதிக்கு மாறு
செய்யமாட்டாய்.
رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّٰهِدِينَ |
ரப்பனா ஆமன்னா fபக்துப்னா மஅஷ்ஷாஹிதீன்
رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةً مِّنكَ ۖ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ |
ரப்பனா அன்ஜில் அலய்னா மாயிததம் மினஸ்ஸமாயி தகூனு லனா ஈதன்ல் லி அவ்வலினா வஆஹிரினா வஆயதம் மின்க வர்ஜுக்னா வஅன்த ஹைருர் ராஜிகீன் (5:114)
எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து (மாயிதா) உணவு மரவையை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக. எங்களுக்கும் எங்கள் முன்னோர்களுக்கும் எங்களுக்கு பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும் உன்னிலிருந்து ((உன் வல்லமையை அறிவிக்கும்) ஒரு அத்தாட்சியாகவும் அது ஆகிவிடும். (எனவே அதிலிருந்து) எங்களுக்கு நீ உணவளிப்பாயாக. நீ உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.
رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ |
ரப்பனா ளலம்னா அன்ஃfபுஸனா வயில்லம் தஃfபிர்லனா வதர்ஹம்னா லநகூனன்ன மினல் ஃஹாஸிரீன் (1:23)
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களைமன்னித்துகிருபைசெய்யாவிட்டால்நிச்சயமாகநாங்கள்நஷ்டவாளர்களில்ஆகிவிடுவோம்.
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّـٰلِمِينَ |
ரப்பனா லாதஜ்அல்னா மஅல் கவ்மிள்ளாலிமீன்
(7:47)
எங்கள்இறைவனே!அநியாயக்காரர்களின்கூட்டத்துடன் எங்களை நீ சேர்த்து விடாதே!
رَبَّنَا ٱفۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِٱلۡحَقِّ وَأَنتَ خَيۡرُ ٱلۡفَٰتِحِينَ |
ரப்பனஃfப்தஹ் பைனனா வ பைன கவ்மினா பில் ஹக்கி வ அன்த ஃஹைருல் ஃfபாதிஹீன் (7:89)
எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் சமூகத்தினருக்குமிடையே நீதியைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக!
رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ |
ரப்பனா அஃfப்ரிஃங் அலைனா ஸப்ரவ் வ தவfப்fபனா முஸ்லிமீன் (7:126)
எங்கள் இறைவனே! எங்களின் மீது பொறுமையைப் பொழிவாயாக, முஸ்லிம்களாக எங்களை நீ மரணிக்கச்
செய்வாயாக.
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلۡقَوۡمِ ٱلظَّـٰلِمِينَ ; وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ |
ரப்பனா லாதஜ்அல்னா ஃfபித்னதல் லில் கவ்மிள்ளாலிமீன் வனஜ்ஜினா பிரஹ்மதிக மினல் காஃfபிரீன்
எங்கள் இறைவனே! அநியாயக்காரர் கூட்டத்தாரிடம் எங்களை சோதனையாக நீ சாட்டிவிடாதே! இன்னும் உன்னுடைய அருளால் நிராகரிப்போர் கூட்டத்தை விட்டும் எங்களை நீ காப்பாற்றுவாயாக!
رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ |
ரப்பனா இன்னக தஃலமு மாநுஃஹ்ஃfபீ வமானுஃலினு வமா யஃஹ்fபா அலல்லாஹி மின் ஷையின் ஃfபில் அர்லி வலாஃபிஸ்ஸமாஇ
(14:38)
எங்கள் இறைவனே! நாங்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிவாய். பூமியிலும் வானத்திலும் எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ |
ரப்பி இஜ்அல்னி முகிமஸ்ஸலாத்தி வமின் துர்ரியதிரப்பனா வதகப்பல் துஆஇ (14:40)
எங்கள் இறைவனே! (இந்த) என்னுடைய துஆவை நீ ஏற்றுக் கொள்வாயாக!
رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ |
ரப்பனஃங்ஃfபிர்லீ வலி வாலிதய்ய வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப் (14:41)
எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோரையும், முஃமின்களையும் தீர்ப்பு நாளில் மன்னிப்பாயாக!
رَبَّنَآ ءَتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا |
ரப்பனா ஆதினா மி(ன்)ல்லதுன்க ரஹ்மதவ் வஹய்யிஃலனா மின் அம்ரினா ரஷதா
(18:10) எங்கள் இறைவனே! உன்னிடத்திலிருந்து ரஹ்மத்தை எங்களுக்கு நீ வழங்கி எங்களுடைய காரியத்தில் நேர்வழியை எங்களுக்கு நீ அமைத்துத் தருவாயாக.
رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَآ أَوْ أَن يَطْغَى |
ரப்பனா இன்னனா நஹாfபு அய் எfப்ருத அலைனா அவ் அய் எத்ஃஙா
எங்கள் இறைவனே! எங்கள் மீது (தண்டனை யளிக்க) அவன் தீவிரமடைந்து விடுவானோ! அல்லது அவன் வரம்பு
மீறிவிடுவானோ!
பயப்படுகிறோம்.
رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّـٰحِمِينَ |
ரப்பனா ஆமன்னா பஃங்ஃfபிர்லனா வர்ஹம்னா வஅன்த கைருர் ராஹிமீன் (23:109)
எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) விசுவாசங் கொண்டோம். எனவே எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரிவாயாக. நீ அருள் புரிவோரிலெல்லாம் மிகச் சிறந்தவன்.
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا |
ரப்பனஸ்ரிஃfப் அன்னா அதாப ஜஹன்னம் இன்ன அதாபஹா கான ஙராமா இன்னஹா ஸாஅத் முஸ்தகர்ரவ் வமுகாமா (25:65/66)
எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக. நிச்சயமாக அது நிலையானதாக இருப்பினும்; சிறிது நேரமாக இருப்பினும் மிகக் கெட்டதாகும்.
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا |
ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வதுர்ரிய்யாதினா குர்ரத அஃயுனிவ் வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா (25:74)
எங்கள் இறைவனே! எங்களுடைய மனைவியர் களிலிருந்தும் எங்களுடைய சந்ததிகளிலிருந்தும் கண்களுக்கு குளிர்ச்சியை எங்களுக்கு வழங்குவாயாக! இன்னும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன்னோடி யாக ஆக்கிடுவாயாக!
رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ |
ரப்பனா லஙஃfபூருன் ஷகூர் (35:34)
எங்களுடைய இறைவன் மிக மன்னிக்கக் கூடியவன்;
நன்றி பாராட்டுகிறவன்.
رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ |
ரப்பனா வஸிஃத குல்ல ஷையின் ரஹ்மதவ் வஇல்மன் பஃfபிர்லில்லதீன தாபூ வத்தபவு ஸபீலக வகிஹிம் அதாபல் ஜஹீம். (40:7)
எங்கள் இறைவனே! நீ (உன்) அருளாலும் ஒவ்வொரு வஸ்துவையும் சூழ்ந்துக் கொண்டாய் எனவே தவ்பா செய்து உன்னுடைய வழியைப் பின்பற்றியவர்களை நீ மன்னிப்பாயாக. அவர்களை நரக வேதனையை விட்டும் நீ காப்பாற்றுவாயாக.
رَبَّنَا وَادْخِلْهُمْ جَنَّتِ عَدْنِ الَّتِي وَعَدُتَهُمْ وَمَنْ صَلَحَ مِن بَابِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّتِهِمُ انَّكَ أَنتَ العَزِيزُ الحكيمة وقهم السياتِ وَمَن تَقِ السَّبِياتِ يَوْمَيةٍ فقد رحمته وذلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ |
ரப்பனா வஅத்ஹில்ஹும் ஜன்னாதி அத்னில்லதீ வஅத்தஹும் வமன் ஸலஹ மின் ஆபாயிஹிம் வஅஜ்வாஜிஹிம் வதுர்ரிய்யாதிஹிம் இன்னக அன்தல் அஜீஸுல் ஹகீம் வகிஹிமுஸ் ஸய்யிஆதி
வமன் தகிஸ் ஸய்யிஆதி யவ்மயிதின் fபகத் ரஹிம்த்தஹுவதாலிக ஹுவல் ஃபவ்ஜுல் அழீம்.
எங்கள் இறைவனே! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள (அத்னு என்னும் நிலையான) கவனங்களில் அவர்களையும் அவர்களுடைய மூதாதையரிலும், அவர்களுடைய மனைவியரிலும், அவர்களுடைய சந்ததியரிலுள்ள சாலிஹானவர்களையும் நீ புகச் செய்வாயாக. நிச்சயமாக நீதான் (யாவற்றையும்) மிகைத்தவன், ஞானமுள்ளவன், இன்னும் தீமைகளை (அதன் வேதனையை) விட்டும் நீ காப்பாற்றுகிறாயோ அவருக்கு திடமாக நீ அருள் செய்துவிட்டாய். இன்றும் அதுவே மகத்தான வெற்றியாகும்.
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ اٰمَنُو |
ரப்பனஃங்ஃfபிர்லனா வலி
இஃஹ்வானினல்லதீன சபகூனா பில் ஈமானி வலா தஜ்அல் ஃfபீகுலூபினா ஙில்லல் லில்லதீன ஆமனூ [59:10]
எங்கள் இறைவனே! எங்களையும் ஈமானில் எங்களுக்கு முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் நீ மன்னித்து விடுவாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதத்தை உண்டாக்கி விடாதே!
رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ |
ரப்பனா இன்னக ரஊஃபுர்ரஹீம் (59:10
எங்கள் இறைவா! நிச்சயமாக நீ இரக்கமுள்ளவன் மிக கிருபையுள்ளவன்.
رَّبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَإِلَيۡكَ أَنَبۡنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ |
ரப்பனா அலைக்க தவக்கல்னா வஇலைக்க அனப்னா வஇலைகல் மஸீர் (60:4)
எங்கள் இறைவனே! உன் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். உன் பக்கமே நாங்கள் மீண்டோம். (நாங்கள்) திரும்பி வருதலும் உன் பக்கமேயாகும்.
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ وَٱغۡفِرۡ لَنَا رَبَّنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ |
ரப்பனா லாதஜ்அல்னா ஃfபித்னதல் லில்லதீன கஃfபரூ வஃங்fபிர்லனா ரப்பனா இன்னக அன்தல் அஜீஜுல் ஹகீம் (60:5)
எங்கள் இறைவனே! உன்னை நிராகரித்து விட்டவர்களுக்குச் சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே! எங்களை மன்னித்து விடுவாயாக. எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் யாவற்றையும் மிகனத்தவன், ஞானமுள்ளவன்.
رَبَّنَآ أَتۡمِمۡ لَنَا نُورَنَا وَٱغۡفِرۡ لَنَآۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ |
ரப்பனா அத்மிம் லனா நூரனா வஃங்fபிர்லனா இன்னக அலாகுல்லி ஷையின் கதீர் (66:8
எங்கள் இறைவனே! எங்கள் ஒளியை எங்களுக்கு நிரப்பமாக்கி வைத்து எங்களை மன்னித்து விடுவாயாக. நிச்சயமாக நீ எல்லா வஸ்துக்களின் மீதும் சக்தி பெற்றவன்
சஜ்தா ஆயத்துகளின் பலன்கள்
ஸஜ்தா ஆயத்துக்கள் 14 யும் ஒரே அமர்வில் ஓதி துஆ செய்வதால் துஆ ஏற்கப்படும்
முழு குர்ஆனில் மொத்தம் 14 ஸஜ்தாவின் ஆயத்துக்கள் உள்ளன அவை அனைத்தையும் ஒரே அமர்வில் வரிசையாக ஓத வேண்டும் ஒவ்வொரு ஆயத்தையும் ஓதி முடித்தபின் ஸஜ்தாவும் செய்ய வேண்டும் கடைசியாக துஆ செய்தால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் ஏற்கப்படும் ஏதாவது சோதனை பிரச்சனைகள் இருந்தால் விரைவில் நீங்கிவிடும் இது பல மூத்த இமாம்களின் அனுபவபூர்வமான அமலாகும்
நூல்: நூருல் ஈழாஹ். ஈழாஹுல் மஸாயில்
இலகுவாக ஓதுவதற்காக அந்த 14 ஆயத்துகளையும் இங்கு வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கிறது
குறிப்பு: இந்த கிதாபை படிக்கும் நல்லடியார்களே!
தங்களின் துஆவில் இந்த அடியார்களையும் அடியார்களின் பெற்றோர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் மேலும்
ஈருலக வெற்றிக்காக துஆ செய்வதையும் மறந்துவிடாதீர்கள்
14 சஜ்தா ஆயத்துகள் |
إِنَّ الَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ ۩ |
1 இன்னல்லதீன இன்த ரப்பிக லா எஸ்தக்பிரூன அன் இபாததிஹி வயுஸப்பிஹூனஹூ வலஹூ எஸ்ஜுதூன்
[அல்அஃராப்]
1 . எவர்கள் நிச்சயமாக உம் இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் அவனை வணங்குவதில் இறுமாப்புக்கொள்வதில்லை எனினும் (நீ மிகப்பரிச்சுத்தமானவன் நீ மிகபரிசுத்தமானவன் என்று) அவனை எப்பொழுதும் துதிச்செய்து கொண்டும் அவனுக்குச்சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கிறார்கள்
அல் குர்ஆன் 7 :206
وَلِلَّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُم بِالْغُدُوِّ وَالْآصَالِ ۩ |
2 வலில்லாஹி எஸ்ஜுது மன் பிஸ்ஸமாவாதி வல் அர்ழி தவ்அவன்(வ்) வகர்ஹன் (வ்)வழிலாலுஹூம் பில்ஙுதுவ்வி வல்ஆஸால்
[அர்ரஃத்]
2 வானங்களிலும் பூமியிலும் இருப்பவை யாவும் அவை விரும்பினாலும்விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து வழிபட்டே தீரும் காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்கள் அவனுடைய கட்டளைக்கு வழிபட்டு முன்பின் செல்கின்றன
يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ۩ |
3 யஹாfபூன ரப்பஹூம் மின் ஃfபவ்கிகிம் வ எஃfப்அலூன மா யுஃமரூன
[அன்நஹ்ல்]
வானங்களும் பூமியிலும் உள்ள மற்ற ஜீவராசிகளும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன மலக்குகளும் அவ்வாறே அவர்கள் பெருமை அடிப்பதில்லை அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள தங்களுடைய இறைவனுக்கு பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையை செய்து கொண்டிருக்கிறார்கள்
وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا ۩ |
4 வயஹிர்ரூன லில் அத்கானி எப்கூன வஎஜீதுஹூம் ஹூஷுஆ
[பனீஇஸ்ராயில்]
இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.
أُولَٰئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ مِن ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِن ذُرِّيَّةِ إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا ۚ إِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَٰنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا ۩ |
5 உலாஇகல்லதீன அன்அமல்லாஹூ அலைஹிம் மினன்நபிய்யீன மின்துர்ரிய்யதி ஆதம வமிம்மன் ஹமல்னா மஅ நூஹிவ் வமின் துர்ரிய்யதி இப்ராஹீம வஇஸ்ராயீல வமிம்மன் ஹதைனா வ அஜ்தபைனா இதா துத்லா அலைஹிம் ஆயாதுர்ரஹ்மானி ஹர்ரூ ஸுஜ்ஜதவ் வபுகிய்யா
[மர்யம்]
இவர்கள் யாவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்கள் ஆவார் இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும் நூலுடன் நாம் கப்பலில் ஏற்றிக் கொண்டவர்களின் சந்ததியிலும் இப்ராஹீம் உடைய சந்ததியிலும் இஸ்ராயில் என்னும் யாகூபுடைய சந்ததியிலும் உள்ளவர்கள் ஆவார்கள் மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள் அவர்கள் மீது ரஹ்மான் உடைய வசனங்கள் ஓத காண்பிக்கப்பட்டால் அழுதவர்களாக சிரம் பணிந்து தொழுவார்கள்
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ ۗ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ |
6 அலம் தர அன்னல்லாஹ யஸ்ஜூது லஹூ மன் ஃபிஸ்ஸமாவாதி வமன் ஃபீல் அர்ழி வஸ்ஸம்ஷு வல் கமரு வன்நுஜுமு வல் ஜிபாலு
வஷ்ஷஜரு வத்தவாப்பு வகஸீரும் மினந்நாஸி வகஸீருன் ஹக்க அலைஹில் அதாபு வமன் யுஹினில்லாஹூ fபமா லஹூ மின் முக்ரிமின் இன்னல்லாஹ எஃfப்அலு மா யஷாஉ
[அல்ஹஜ்]
நபியே வசனங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களிலும் மலைகளிலும் மரங்களும் கால்நடைகளும் மனிதரில் அந்நேகரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் காணவில்லையா எனினும் பெரும்பாலோர் மீது வேதனையை விதிக்கப்பட்டு விட்டது எவனை அல்லா இழிவு படுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது நிச்சயமாக அல்லாஹ் நாடியதையே செய்கின்றான்
وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَٰنِ قَالُوا وَمَا الرَّحْمَٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا ۩ |
7 வ இதா கீல லஹூமுஸ்ஜூதூ லிர்ரஹ்மானி காலூ வமர்ரஹ்மானு அனஸ்ஜூது லிமா தஃமுருனா வஜாதஹூம் நுfபூரா
[அல் புர்கான்]
ஆகவே அந்த ரஹ்மானை சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்கு கூறப்பட்டால் ரஹ்மான் யார் நீ கூறியவைகளை எல்லாம் நாங்கள் எதற்காக செய்ய வேண்டும் என்று கேட்கின்றனர் மேலும் அவ்வாறு கூறுவது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்குகிறது
أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ (25) اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ۩ |
8 அல்லா யஸ்ஜூதூ லில்லாஹில்லதீ யுஹ்ரிஜூ ல் ஹப் அ ஃfபீஸ்ஸமாவாதி வல் அர்லீ வயஃலமு மாதுஹ்ஃfபூன வமா துஹ்லினுன்
அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவ ரப்புல் அர்ஷில் அழீம்
[நம்ல்]
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை வெளிப்படுத்தக்கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா மேலும் அவன் நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் நன்கு அறிந்து கொள்கிறான்அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயகன் வேறு யாரும் இல்லை அவன்தான் மகத்தான அரசு கூறிய இறைவன் என்று கூறியது
إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ۩ |
9 இன்னமா யுஃமினு பி ஆயாதினல்லதீன இதா துக்கிரு பிஹா ஹர்ரு சுஜ்ஜதவ் வஸப்பஹூ பிஹம்தி ரப்பிஹிம் வஹூம் லா யஸ்தக்பிரூன்
[ஸஜ்தா]
நம்முடைய எல்லா வசனங்களும் நினைவூட்ட பெற்றால் எவர்கள் பூமியில் விழுந்து சிரம் பணிந்து தாங்கள் இறைவனை புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள் தான் நம்முடைய வசனங்களை உண்மையாக உணர்வார்கள் அவர்கள் கருமம் கொண்டு பெருமை அடிக்க மாட்டார்கள்
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِ ۖ وَإِنَّ كَثِيرًا مِّنَ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَّا هُمْ ۗ وَظَنَّ دَاوُودُ أَنَّمَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ ۩ |
10 கால லகத் ழலமக பிசுஆலி நஃஜதிக இலா நிஆஜீஹீ வஇன்ன கஸிரம் மினல் ஹூலதாயி லயப்ஙி பஃலுஹூம் அலா பஃலின் இல்லல்லதீன ஆமனூ வ அமிலுஸ்ஸாலிஹாதி வகலீலும் மாஹூம் வழன்ன தாவூது அன்னமா ஃfபதன்னாஹூ ஃfபஸ்தங்fபர ரப்பஹூ வஹர்ர ராகிஅன் வஅனாப்
[ஷாத்]
அதற்கு தாவூத் உம்முடைய ஆட்டை அவர் தன்னுடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உன் மீது செய்யும் அக்கிரமாகும் நிச்சயமாக கூட்டாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் ஒருவர் மற்றவரை மோசம் செய்து விடுகின்றனர் விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்கிறவர்களை தவிர இத்தகையோர் வெகு சிலர் என்று கூறினார் இதற்குள் தாவுத் ஆகிய அவர் நிச்சயமாக நாமே அவரை சோதனைக்கு உள்ளாக்கி விட்டோம் என்று எண்ணி தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும் படி கூறி குனிந்து சிரம் பணிந்து விழுந்து வணங்கி தன் இறைவனின் நோக்கில் பிரார்த்தனை செய்தார்
فَإِنِ اسْتَكْبَرُوا فَالَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْأَمُونَ ۩ |
11 ஃfபஇனிஸ்தக்பரூ ஃfபல்லதீன இன்த ரப்பிக யுஸப்பிஹூன லஹூ பில்லைலி வன்னஹாரி வஹூம் லா யஸ்அமூன்
[ஹாமீம் ஸஜ்தா]
இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் இறைவன்களை அறிவிக்கக்கூடிய அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவை யாவும் ஆகவே மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வை வணங்குவர்களாக இருந்தால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சினம் பணியாதீர்கள் இவர்களைப் படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்பின்னர் இவர்கள் கர்ப்பம் கொள்வாரணாயின் உமது இறைவனிடத்தில் உள்ளவர்கள் இரவும் பகலும் அவனை துதிச் செய்து புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதில் அவர்கள் சோர்வடைவதில்லை
فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا |
12 ஃபஸ்ஜூதூலில்லாஹி வஃபுதூ
[அன்நஜ்மு]
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ |
13 வஇதா குரிஅ அலைஹிமுல் குர்ஆனு லாயஸ்ஜூதூன்
[அல்இன்ஷீகாக்]
அவர்களுக்கு இந்த குர்ஆனை ஓதி காண்பிக்கப்பட்ட போதிலும் இறைவனை அவர்கள் சிரம் பணிந்து வணங்கவில்லை
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ |
14 கல்லா லா துதிஃஹூ வஸ்ஜூத் வக்தரிப்
[அல்அலக்]
ஆகவே நபியே நிச்சயமாக நீர் அவனுக்கு வழி படாதீர் உமது இறைவனுக்கு சிரம் பணிந்து வணங்கி அவனை அணுகுவீராக
Leave a Reply